Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

திருவண்ணாமலையில் சுவாதி மருத்துவமனை திறப்பு விழா :

திருவண்ணாமலையில் சுவாதி மருத்துவமனையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மத்த லாங்குளத் தெருவில் பெரியார் சிலை அருகில் ஜி.ஜே.குரூப்சின் அங்கமான சுவாதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.பி., அண்ணாதுரை, திமுக மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் கம்பன், சரஸ்வதி சம்பந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித் தனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் வரவேற்றார்.

எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், ஹமீது மருத்துவ மனை டாக்டர் அப்துல்முனாப், மதி ஜி.காந்திமதி கல்வி அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை வகித்து, சுவாதி மருத்துவமனையை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையில் 34 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாக்டர் கணேசன் புதிதாக கட்டியுள்ள சுவாதி மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை வசதிகளுடன், நீரிழிவு நோய், குழந்தைகள் நலம், மனநல மருத்துவம், மகப்பேறு, எலும்பு முறிவு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய் பிரிவுகளும் செயல்பட உள்ளன.

மருத்துவமனையில் மாடுலர் ஆபரேசன் தியேட்டர், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, டிஜிட்டல் எக்ஸ்ரே, நவீன ரத்த பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை திறப்பு விழாவில், மூன்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மண்ணுலிங்கம், டாக்டர் செந்தில்நாதன், மாவட்ட அரசு வழக்கறிஞர் புகழேந்தி, சிவா குரூப்ஸ் சேர்மன் சிவஞானம், விமல்குமார் உள்ளிட்டமுக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். சுவாதி மருத்துவமனை டாக்டர்கள் கணேசன், பிரதீப் கணேசன், விமலக் கண்ணன், பிரீத்தி கணேசன் மற்றும் ஜெயந்தி கணேசன் ஆகியோர் நன்றி கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x