Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

டான்சில்க் தலைவர், துணைத் தலைவர் பதவி நீக்கம் :

காஞ்சிபுரம்

தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர் இணையத்தின் (டான்சில்க்) தலைவர், துணைத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தலைவராக ஆர்.டி.சேகர், துணைத் தலைவராக செந்தில் ராஜ்குமார் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு எதிராக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்திருந்தனர்.

இது தொடர்பாக சேலம் டான்சில்க் கிளை அலுவலகத்தில் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. பெரும்பான்மை நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைவர், துணைத் தலைவர் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x