Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகளான வழக்கறிஞர் ஜெயம்பெருமாள், சமூக ஆர்வலர் நான்சி, மகளிர் குழுவைச் சேர்ந்த தனலெட்சுமி, சாமிநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன், மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டு இருந்தாலும், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் பெண்களுக்கு சிறிய அளவிலான வேலைவாய்ப்புகள், 7,100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மாவட்டம்முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், மருத்துவ முகாம்கள் என, தனது சமூக பணிகளை செய்து வருகிறது.கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளான மக்களை பாதுகாக்க ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துகொடுத்து பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பாதுகாத்துள்ளது. ஆலையை திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். தற்போது 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைஆதரவு கூட்டமைப்பு' என்றஇயக்கத்தை புதிதாக உருவாக்கியுள்ளோம். வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளவர்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT