Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

நறுவீ மருத்துவமனையில் நீரிழிவு பாதம் சிகிச்சை மையம் :

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நீரிழிவு பாதம் சிகிச்சை மையம் தொடக்க விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள்.

வேலூர்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நீரிழிவு பாதம் சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

வேலூர் நறுவீ மருத்துவமனை யில் உலக நீரிழிவு தின விழா மற்றும் நீரிழிவு பாதம் சிகிச்சை மையம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் வரவேற்றார். ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் சேஷாத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீரிழிவு பாதம் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து நோயாளிகளுக்கான கையேட்டை யும் வெளியிட்டார்.

இதன் ஒரு பகுதியாக நீரிழிவு நோயாளிகளுடன் மருத்துவர் களின் கலந்துரையாடல், ஊட்டச்சத்து நிபுணர்களின் உணவு குறித்த விழிப்புணர்வு முகாம், பயிற்சிகள் நடைபெற்றன. இதில், மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், நீரிழிவு நோய் துறை தலைவர் டாக்டர் சைமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், நறுவீ மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x