Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் தி.மலை நகருக்கு 4 நாட்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 19-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நாட்கள்உட்பட 17-ம் தேதியில் (இன்று) இருந்து 20-ம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு கிரிவலம் செல்லவும், தரிசனம் செய்யவும் தடை விதித்து உத்தர விடப்பட்டுள்ளது. இதேபோல், மகா தீபத்தை தரிசனம் செய்ய 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாவட்ட மக்களை திருவண்ணா மலைக்கு யாரும் வர வேண்டாம் என ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆகியோர் கேட்டுக் கொண் டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான ஒலி, ஒளி அறிவிப்பை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது. மேலும், திருவண்ணாமலை நகருக் குள் மக்கள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில், நகரை ஒட்டி அமைந்துள்ள புறவழிச் சாலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கேயே தடுப்பு அமைக்கப்பட்டு, நகருக்குபக்தர்கள் உள்ளே வருவதை தடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தீபத் திரு விழாவையொட்டி வரும் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரம் மற்றும் கிரிவலப் பாதை அருகே உள்ள மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் விதித் துள்ளது கட்டுப்பாடுகள் இல்லை என்றும், கெடுபிடிகள் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT