Published : 16 Nov 2021 03:09 AM
Last Updated : 16 Nov 2021 03:09 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : அமைச்சர், எம்எல்ஏக்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்

கடலூர்/விருத்தாசலம்/விழுப்புரம்

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அமைச்சர், எம்எல்ஏக்கள், ஆசிரியர்கள் மற்றும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 1,765 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தும் வகையில்

மலர்கள், இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், பவன்குமார் ஜி.கிரியப் பனவர்,கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, கடலூர் வட்டார கல்வி அலுவலர் சரளாஅறிவழகி, செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விருத்தாசலம் நகராட்சிக் குட்பட்ட பூதாமூர் நடுநிலைப் பள்ளியில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவெ கணேசன் வரவேற்றார். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது வருவாய் கோட் டாட்சியர் ராஜ்குமார்,வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான 1,655 பள்ளிகள் திறக்கப்பட்டன. 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அரசு மகளிர் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு திமுக எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்ட திமுகவினர் ஆசிரியர்களுடன் இணைந்து பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x