Published : 16 Nov 2021 03:10 AM
Last Updated : 16 Nov 2021 03:10 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழா வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, தி.மலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (19-ம் தேதி) அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை டிசம்பர் 4-ம் தேதி இயங்கும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT