Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM

செஞ்சி - சிட்டாம்பூண்டியில் விரைவில் அரசு கலைக் கல்லூரி : தேர்வான இடத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் ஆய்வு

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

செஞ்சி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லுாரி அமைக்க தமிழக முதல்வர்ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி உள் ளார்.

கல்லுாரி அமைப்பதற்கு செஞ்சி–விழுப்புரம் சாலையில் சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் உள்ள இடத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், ஆட்சியர் மோகன் ஆகி யோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தேர்வு செய்துள்ள இடத்தை ஒரு வார காலத்தில் சுத்தம் செய்து,விஸ்திரனத்தை அளந்து அறிக்கை யாக தருமாறு வட்டாட்சியர் பழ னிக்கு அமைச்சர் மஸ்தான் உத்தரவிட்டார். தொடர்ந்து பொன்பத்தி கிராம எல்லையில் பட்டு வளர்ச் சித்துறை அலுவலகம் அருகே வேளாண் விரிவாக்க மையம் அமைக்கவும், வழக்காம்பாறை, ஆணை குட்டை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும், செஞ்சி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டும் இடங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி யையும், மேல்மலையனூர் ஊராட்சிஒன்றியத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் கட்டடம் கட்டும் பணியையும் அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மத்திய அரசு திட்டத்தின் கீழ் 69 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். மேல்மலையனூரில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய மற்றும் சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யவும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் சங்கர், திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x