Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்மழையால் சிவகங்கை அருகே அல்லூர்-பனங்காடி, மானாமதுரை அருகே செய்களத்தூர், சன்னதி புதுகுளம் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்எல்ஏ முன்னிலையில் பேரிடர் கண்காணிப்பு அலுவலர் லால்வேளா ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 286 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சன்னதி புதுக்குளத்தில் மட்டும் 20 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT