Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகளில் 485 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 305 ஏரிகளில் 70 சதவீதத்துக்கு அதிகமாகவும், 87 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் தண்ணீர் நிரம்பியுள்ளது. எனினும், 32 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான நீரே உள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பாலாறுக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. ஆற்றின் இருபுறமும் கரையைத் தொட்டு தண்ணீர் செல்கிறது. செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப் பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
தொடர் மழையால் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியின் அருகில் உள்ள நியமத்துல்லா நகரில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மாங்காடு செல்வகணபதி நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 வீடுகள் சேத மடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT