Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி வருவதோடு, பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ஏரியில் கரை உடைந்து தேங்கிய நீரும் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தொடர் மழையால் 51 ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதில், சங்கராபுரம் வட்டம் ச.செல்லம்பட்டு பொதுப்பணித்துறை ஏரியும், நெடுமானூர் பொதுப்பணித்துறை ஏரியும், முழு கொள்ளளவை அடைந்துள்ளன. அவைகளை மாவட்ட ஆட்சியர் தர் பார்வையிட்டார். உபரி நீர் வாய்க்கால் குடியிருப்பு பகுதியை ஒட்டிச் செல்வதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வட்டாட்சியர் மற்றும்பொதுப்பணித்துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளில் இருந்து சுமார் 2,500 கன அடி திறந்து விடப்படுவதால் அணைப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல அந்த வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பல இடங்களில் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஆனால், உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டையில் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், ஏரியின் கரைப் பகுதியில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி ஏரியை தூர்த்து விடும் பணியை ஊராட்சி நிர்வாகம் செய்து வருவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஏரியில் விடப்படும் கழிவுநீர் சாலைகளிலும் வாய்க்கால்களிலும் செல்வதால், அப்பகுதி மக்களுக் கும் கால் நடைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT