Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
மதுராந்தகம் ஏரியில் செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
மதுராந்தகம் ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது. தற்போது இந்த ஏரிக்கு விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதே அளவு தண்ணீர் கலங்கள் மூலம் வெளியேறி வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் ஏரியின் பாதுகாப்பு கருதி மதகுகளை திறந்து தண்ணீர் வெளியேற்றப்படும் என்பதால் கிளியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம் ஏரியில் செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இவர் வள்ளிபுரம் தடுப்பணையிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர் நடராஜன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன், இளநிலை பொறியாளர் குமார் உடன் இருந்தனர்.
இதேபோல் நீர்வள ஆதாரத் துறை, சென்னை பாலாறு வடிநில வட்டத்தின் நீர்வள கண்காணிப்பு பொறியாளர் முத்தையாவும் மதுராந்தகம் ஏரியில் ஆய்வு செய்தார். ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு, வெளியேறும் நீரின் அளவு தொடர்பாக நீர்வள ஆதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT