Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

போலீஸ் போல நடித்து மதுரையில் பெண்ணிடம் 21 பவுன் வழிப்பறி :

மதுரை: மதுரை காமராசர் சாலை அபிராமி திரையரங்கு அருகே வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி போர்ச் செல்வி(54). இவர்,கடந்த 8-ம் தேதி முனிச்சாலை பிரதான சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த இருவர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் போர்ச்செல்வியிடம் அதிக நகைகளை அணிந்து செல்லக்கூடாது என அறிவுரை கூறுவதுபோல நடித்து, அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கி காகிதத்தில் மடித்துக் கொடுப்பது போல திருப்பிக் கொடுத்தனர்.

பின்னர், அவர் வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது காகிதத்தில் கற்கள் இருந்தன. இதுகுறித்து போர்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x