Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

சாத்தியார் அணை நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியர் உறுதி :

பாலமேடு அருகேயுள்ள சாத்தியார் அணை முழு கொள்ளளவான 29 அடியை நெருங்கியதால் அணையை மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், எஸ்பி வி.பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டனர்

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ளது சாத்தியார் அணை. தொடர் மழையால் இந்த அணை முழுக் கொள்ளளவான 29 அடியை எட்ட உள்ளது. இந்நிலையில் அணையை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட எஸ்பி வி.பாஸ்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் உடன் சென்றனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:

மாவட்டத்திலுள்ள கண்மாய்களில் 70 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. சாத்தியார் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து திறந்து விடப்படும். அணைக்கு வரும் நீர்வழிப்பாதையில் அடைப்பு, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x