Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

கூடலூரில் ‘பிரிவு 17’ நிலங்களில் வசிப்போருக்கு - பட்டா வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் : அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

உதகை

உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில்‌ நடைபெற்ற ‘உங்கள்‌ தொகுதியில்‌ ஸ்டாலின்‌’ எனும்‌ நிகழ்ச்சியில்‌ முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, நீலகிரி மாவட்டம்‌, கூடலூர்‌ பகுதியை சேர்ந்த ஒரு மாணவி, ‘தனது வீடு ஜென்மம்‌ நிலத்தின்‌ பிரிவு 17-ன்‌ கீழ்‌ உள்ளது. அதனால்‌ மின்‌ இணைப்பு கிடைக்காமல்‌ படிப்பதற்கு சிரமப்படுவதாகவும், இதுபோன்று 16,000-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள்‌ கஷ்டப்பட்டு வருகின்றன’ என கோரினார். இதற்கு தீர்வு காணப்படும்‌ என முதல்வர் தெரிவித்திருந்தார்‌.

கூடலூர்‌ ஜென்மம்‌ எஸ்டேட்‌ (ஒழிப்பு மற்றும்‌ ரயத்வாரி மாற்றம்‌) சட்டம்‌ 1974 முதல்‌ அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கூடலூர்‌ கோட்டத்தில்‌ ஜென்மம்‌ நில உடமைதாரர்களிடமிருந்து அரசு எடுத்த நிலம்‌ 80,087.74 ஏக்கர்‌ ஆகும்‌.

முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌கட்ட நிலவரித் திட்ட பணியின்‌போது பிரிவு 8. 9, 10.11, 14.15 மற்றும்‌ 53-ன்‌ கீழ்‌ முடிவு செய்யப்பட்ட மொத்த பரப்பு 45,101.46 ஏக்கர்‌. பிரிவு 17 நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு முடிவு செய்யப்படாமல்‌ உள்ள நிலத்தின்‌பரப்பு 34,986.28 ஏக்கர்‌. இதில்‌ 11 பெருந்தோட்ட நிறுவனங்கள்‌ வசம்‌ 26,823.49 ஏக்கரும்‌, 82 சிறுதோட்ட நிறுவனங்களின்‌ வசம்‌ 8,162.79 ஏக்கர்‌ நிலமும்‌ உள்ளது.

கூடலூர்‌ மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 10,052 குடும்பங்கள்வசிக்கின்றன. இவ்வளவு குடும்பங்களும், வீடு மற்றும்‌ கட்டிடம்‌மூலம்‌ ஆக்கிரமிப்பு செய்துள்ளது288.63 ஏக்கர்‌. விவசாயம்‌ மூலம்‌ 4866.96 ஏக்கர்‌ நிலம் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. வணிகரீதியாக 88 பேர்‌ 8.38 ஏக்கர்‌ நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்‌. ஆக மொத்தம்‌80,087.74 ஏக்கர்‌ நிலத்தில்‌ 5,161.97 ஏக்கர்‌ நிலம்‌ ஆக்கிரமிப்பில்‌ உள்ளது. முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று, அவரது வழிகாட்டுதல்படி அரசு தலைமைச் செயலாளர்‌ மூலம்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மனுக்கள் வாங்கிய காங்கிரஸார்

காங்கிரஸ் கட்சி சார்பில் உதகை சட்டப்பேரவை உறுப்பினர்ஆர்.கணேஷ் தலைமையில் கூடலூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணைத்தலைவர் ராஜேஷ், கொறடா விஜயதாரணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராதாகிருஷ்ணன், ரூபி மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் நிலப்பிரச்சினை தொடர்பாக கூடலூர்மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அதன்பின் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கூடலூர், பந்தலூர்பகுதிகளில் ரயத்வாரி சட்டம், ஜென்ம எஸ்டேட் சட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்தாண்டு பிரிவு 17 சட்டத்தை நீக்கிவிட்டு, ‘16 ஏ’ என்ற சட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. இது மக்களுக்கு எதிரான சட்டம்.கூடலூரில் நிலவும் நிலப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x