Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபயணம் நிறைவடைந்தது.
வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, துணைத் தலைவர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணைப் பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள் மற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என, சுமார் 1,000 பேர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன் தொடங்கிய பேரணிக்கு, கோவில்பட்டி பிரதான சாலை வங்கி கிளை மேலாளர் ஜெபஸ்டின் தனராஜ் தலைமை வகித்தார். பசுவந்தனை சாலை வங்கி கிளை மேலாளர் அழகுமலை முன்னிலை வகித்தார். பேரணியை பிரபாகரன் தொடங்கி வைத்தார். வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருநெல்வேலி, திருச்சி, மதுரை, சென்னை, சேலம், கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், மும்பை என 12 மண்டல ங்களிலும் விழிப்புணர்வு நடைபயணம் நடை பெற்றது என, வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT