Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - தீபாவளி பண்டிகைக்கு ரூ.13.99 கோடிக்கு மது விற்பனை : கடந்த ஆண்டைவிட ரூ 49.72 லட்சம் குறைவு

விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13. 99 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ 49.72 லட்சம் குறைவாக விற்பனையாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 122 அரசு மதுபானக்கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 மதுபானக் கடைகள் என மொத்தம் 225 மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13.99 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான 3-ம் தேதி 8,037 அட்டைப் பெட்டிகள் பிராந்தியும் 4,670 அட்டைப்பெட்டிகள் பீர் என மொத்தம் ரூ.6,09,35,845-க்கு விற்பனையானது. தீபாவளியன்று 4-ம் தேதி 9,079 அட்டைப்பெட்டிகள் பிராந்தியும்,  10,772 அட்டைப்பெட்டிகள்  பீர் எஊன மொத்தம் ரூ.7,90,29,130-க்கும் என மொத்தம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13,99,64,795-க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டில் தீபாவளிக்கு முந்தைய நாள் 8,670 அட்டை பெட்டிகள் பிராந்தியும், 5,306 அட்டைப் பெட்டிகள் பீர் பாட்டில்களும் ரூ.6,63,91,220- க்கு விற்பனையானது. தீபாவளியன்று 8,885 பெட்டிகள் பிராந்தியும், 5,306 அட்டைப் பெட்டிகள் பீர் பாட்டில்களும் ரூ.7,85,45,590 க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.14,49,36,810 க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்தாண்டு விற்பனை ரூ. 49,72,015 குறைவாக விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x