Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் வீரபாண்டி ராமபுரத்தில் வசிக்கும் 7 வயதுசிறுவன், நகர் பிச்சம்பாளையம்புதூரில் வசிக்கும் 11 வயதுசிறுவன் ஆகியோருக்கு டெங்குகாய்ச்சல் உறுதியானது.
இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கான தனிப்பிரிவில் இருவரும்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT