Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM
மதுரையில் சிஐடியூ தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சங்கம் சார்பில், சட்டப்படி போனஸ் கோரி மாட்டுத் தாவணி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் வி.அழகுமலை தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத் தலைவர் கணேசன், செயலாளர் ரா.தெய்வாராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சிவாஜி, சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ராமசாமி ஆகி யோர் பேசினர்.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT