Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM
பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் வரை 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை, பர்கூர் எம்எல்ஏ மதியழகன், விவசாயிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடையி லுள்ள பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம் பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாயில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்ணீர் செல்வது தடைபடுவதால், கால்வாயை அகலப்படுத்தி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன், பொதுப்பணித்துறை அலு வலர்கள், விவசாயி களுடன் சென்று வேலம்பட்டி பகுதியில் கால்வாயை ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாய் புதர் மண்டி உள்ள இடங்களில் உடனடியாக சீரமைக்க வேண்டும். மண் சரிந்துள்ள இடங்களில், மேடான பகுதியில் இயந்திரங்கள் அகற்ற வேண்டும். கால்வாயை அகலப் படுத்தியும், தொட்டிப்பாலம் உயர்த்தி, அகலமாக அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.
கால்வாயில் தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினர்.
விவசாயிகள் கூறும்போது, கால்வாய் அமைக்க நிலம் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன. இழப்பீடு கேட்டு 500-க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எம்எல்ஏ கூறும்போது, சட்டப் பேரவையில் ஏற்கெனவே இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திப் பேசி உள்ளேன். 3 மாதங்களுக்குள் இழப்பீடு பெற்றுத் தர நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜ், இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பயன்பெறும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT