Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 49,57,303 ஆண்கள், 51,98,949 பெண்கள், 722 இதரர் என மொத்தம் 1,01,56,974 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சு.சிவராசு நேற்று வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “திருச்சி மாவட்டத்தில் 11,37,113 ஆண்கள், 12,04,743 பெண்கள், 263 இதரர் என மொத்தம் 23,42,119 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “அரியலூர் மாவட்டத்தில் 2,61,252 ஆண்கள், 2,66,296 பெண்கள், 10 இதரர் என மொத்தம் 5,27,558 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ப. வெங்கடபிரியா வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “ பெரம்பலூர் மாவட்டத்தில் 2,80,334 ஆண்கள், 2,92,246 பெண்கள், 35 இதரர் என மொத்தம் 5,72,615 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியபோது, “கரூர் மாவட்டத்தில் 4,33,011 ஆண்கள், 4,66,531 பெண்கள், 80 இதரர் என மொத்தம் 8,99,622 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,66,447 ஆண்கள், 6,85,364 பெண்கள், 67 இதரர் என மொத்தம் 13,51,878 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “நாகை மாவட்டத்தில் 2,77,515 ஆண்கள், 2,91,804 பெண்கள், 12 இதரர் என மொத்தம் 5,69,331 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரா.லலிதா வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “மயிலாடுதுறை மாவட்டத்தில் 3,82,055 ஆண்கள், 3,93,190 பெண்கள், 34 இதரர் என மொத்தம் 7,75,279 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,04,103 ஆண்கள், 10,60,560 பெண்கள், 157 இதரர் என மொத்தம் 20,64,820 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர், அவர் கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் 5,15,473 ஆண்கள், 5,38,215 பெண்கள், 64 இதரர் என 10,53,752 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார்.
காரைக்கால் மாவட்டத்தில்...
இதேபோல, காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அர்ஜூன் சர்மா வெளியிட்டார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் 73,857 ஆண்கள், 85,850 பெண்கள், 21 இதரர் என மொத்தம் 1,59,728 வாக்காளர்கள் உள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT