Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் வழங்க நடவடிக்கை : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.செங்கமுத்து பேசியது: மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும். தேசியமய மாக்கப்பட்ட வங்கிக ளில் விவசா யக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா பாசன விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்ம ராஜன் பேசியபோது, “பொதுப் பணித் துறை வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்தி, சாலை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பயிர்க் காப்பீடு செய்து, இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

விவசாயிகள் பாண்டியன், இளங்கோவன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசியபோது, “சமத்துவபுரங்களில் பயனாளிக ளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் தொகை வசூலிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆட்சியர், மாவட்டத்தில் இதுவரை பெய்துள்ள மழையளவு, உரம் கையிருப்பு குறித்து விளக் கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.பழனிசாமி, வேளாண்மை துணை இயக்குநர்கள் கு.பழனி சாமி, சு.சண்முகம் உட்பட பலர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x