Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
தண்டராம்பட்டு அருகே பிக்அப் அணையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு உட்பட்ட பிக்அப் அணை, தண்டராம்பட்டு உலகளாப்பாடியில் உள்ளது. அங்கிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை நகராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிக் அப் அணையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், குடிநீர் வழங்கும் பணி, தடை யின்றி நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நகராட்சி உதவி பொறி யாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT