விருதுநகர் அருகே சிவஞானபுரத்தில் திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பணிக்காக ராம்கோ நிறுவனம் மூலம் இலவசமாக சிமென்ட் மூட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.
விருதுநகர் அருகே சிவஞானபுரத்தில் திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பணிக்காக ராம்கோ நிறுவனம் மூலம் இலவசமாக சிமென்ட் மூட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.

திருநங்கைகளுக்கான பசுமை வீடுகளுக்கு - ரூ.4.50 லட்சம் சிமென்ட் வழங்கல் : ராம்கோ நிறுவனம் ஏற்பாடு

Published on

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகள் 6 பேருக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பார்வையிட்டார்.

கட்டுமானப் பணிக்கு ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் 900 சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த சிமென்ட் மூட்டைகளை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலகவதி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சக்திமுருகன், ராம்கோ துணை பொது மேலாளர் (நிர்வாகம்) ராமச்சந்திரன், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in