Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM

மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானபோது கைதிதப்பி ஓட்டம் :

மதுரை

மதுரை அவனியாபுரம் அருகே சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் மீது ஆயுதம் வைத்திருந்ததாக அவனியாபுரம் போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவராகவே முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கோபமடைந்த நீதித்துறை நடுவர், பாலமுருகனை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற அறை வளாக கூண்டில் அமர வைக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து சார்பு நீதிமன்ற அலுவலர் கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x