Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.23.47 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மூலம் தகுதியான 5429 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கை, கால்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் செய்யும் திட்டம் (பட்டதாரி) 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்து கொள்ளும் திட்டம் (பட்டதாரி) 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1லட்சத்துக்கான காசோலையும், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்து கொள்ளும் திட்டம் (பட்டதாரி அல்லாதோர்) 1 பயனாளிக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், நலவாரிய திட்டம் இயற்கை மரணம், ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.3,91,000த்துக் கான காசோலையும், 1 பயனாளிக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையும், மனவளர்ச்சி குன்றியோருக்கு மாதாந்திரபராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் 56 பயனாளிகளுக்கு ரூ.9.9 லட்சத்துக்கான ஆணையும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம்44 பயனாளிகளுக்கு ரூ.6,55,500-த்துக்கான ஆணையும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும்திட்டத்தின் கீழ் தலா ரூ.4,203 வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.84,062 மதிப்பிலும் என மொத்தம் 149 பயனாளிகளுக்கு ரூ.23.47 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி, உதகை சார் ஆட்சியர் மோனிகா ரானா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, திறன் உதவியாளர் விஜயன், அரசுத்துறை அலுவலர் கள்,மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT