திருப்பூரில் இன்று வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்  :

திருப்பூரில் இன்று வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் :

Published on

திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட முன்னோடி வங்கி, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளுடன் இணைந்து இன்று (27-ம் தேதி) காங்கயம் சாலை காயத்ரி மஹாலில், வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனைகள் மற்றும் முகாமில் பெறக்கூடிய கடன் விண்ணப்பங்களை பரீசிலனை செய்து, தகுதியானவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்குவதற்காக, அரசு மற்றும் வங்கித்துறையை சார்ந்தவர்களுக்கு 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயக் கடன், சிறு, குறு தொழிற்கடன், வாகனக் கடன், கல்விக்கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களை பெற ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in