Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM
விருதுநகர் மாவட்டம், திருச் சுழியைச் சேர்ந்த பாண்டி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சுழி தாலுகா, சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பகுதியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. மேலும் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, பாண்டியன் கிராம வங்கி, வேளாண் கூட் டுறவு வங்கி ஆகியவை அருகே யுள்ள இலுப்பையூரில் உள்ளன.
இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடையை அமைத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுவர் என்பதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடையைத் திறந்தனர்.
இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடையை மூட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேதுபுரத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு டாஸ்மாக் கடைகளை அமைக்க, தூர நிர்ணய விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். பெரும்பாலான உள்ளூர்வாசிகள் டாஸ்மாக் கடை திறப்பதை விரும்பவில்லை.
மனுதாரர் இதுகுறித்து ஆட்சியரிடம் புதிதாக மனு தாக்கல் செய்யலாம். ஆட்சியர் நேரடியாகவோ அல்லது தனது நேரடி பிரதிநிதி மூலமாகவோ சம்பந்தப்பட்ட பகுதிகளில் தூரக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் உள்ளூர் மக்களின் கருத்துகள் குறித்து கவனத்தில் கொண்டு, 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT