Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM
சக்கிமங்கலம் பகுதியில் முன்மாதிரி தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார்.
மதுரை சக்கிமங்கலம் பகுதியில் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை ஸ்டார் மூலம் பார்வையற்றவர்களுக்கு 15-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கான பட்டா மற்றும் வீட்டின் சாவி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி புதிய வீடுகளுக்கான பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது, அரசு செய்து தரவேண்டிய காரியத்தை ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை ஸ்டார் நிர்வாகத்தினர் செய்து கொடுத்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. அதுவும் நான் சார்ந்த மதுரை கிழக்கு தொகுதி யில் இப்பகுதி உள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது. சக்கிமங்கலம் பகுதி யில் முன்மாதிரி தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் னி வாசன், செய்தித் தொடர்பாளர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT