வியாழன், டிசம்பர் 26 2024
Last Updated : 25 Oct, 2021 03:09 AM
Published : 25 Oct 2021 03:09 AM Last Updated : 25 Oct 2021 03:09 AM
தேனி: தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வடபுதுப்பட்டி ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது. பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுக்குமார் தலைமை வகித்தார். வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவர் ரேணுபிரியா முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் மாணவியர் கலந்து கொண்டனர். ஊராட்சியில் நடந்த தூய்மைப் பணியில் 10 கிலோ மட்காத குப்பைகள் அகற்றப்பட்டன. துணை முதல்வர் ஏ.கோமதி, திட்ட அலுவலர்கள் அட்சயாபாரத், மாதாமரியாள், செஞ்சுருள் சங்க அலுவலர்கள் கிருஷ்ணவேணி, பாலசுப்புலட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT