Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

பாளையங்கோட்டையில் பாரம்பரிய உணவுத் திருவிழா :

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவை ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். மேலும், ‘EAT RIGHT TIRUNELVELI’ என்ற தலைப்பில் பாரம்பரிய உணவுகள் செய்யும் முறை குறித்த புதிய யூ.டியூப் வலைதளத்தை தொடங்கி வைத்தார்.

ஆட்சியர் கூறும்போது, “மக்களின் உடல்நலம் பேணவும், ஆரோக்கியமாக வாழவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பசியோடு இருப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கும் உணவு குடில் சேவை திட்டம் திறந்து வைக்கப்பட்டது.புதிதாக தொடங்கிவைக்கப்பட்ட யூ.டியூப் வலைதளம் மூலம் பாரம்பரிய உணவு செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம். கல்லூரிகளில் என்எஸ்எஸ், என்சிசி இயக்கம் மாதிரி ‘EAT RIGHT TIRUNELVELI CLUB’ தொடங்கப்பட்டு மாணவர்களிடையே பாரம்பரிய மற்றும் சரிவிகித உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சற்றே குறைப்போம் உப்பு, இனிப்பு, கொழுப்பு எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

நம் முன்னோர்கள் நமக்களித்த பாரம்பரிய உணவை, அதன் சுவையை, அது தரும் பலன் களை அனைவரும் ருசித்து பலனடைவோம். பண்டிகை காலங்களில் வளரும் இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவு வகைகளை உன்பதற்கு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

அப்துல் வகாப் எம்எல்ஏ, மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரை கண்ணன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், வேளாண்மைத் துறை பணியாளர்கள், காணி இன மக்கள், சித்த மருத்துவத்துறை பணியாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை பணியாளர்கள், சாரதா மகளிர் கல்லூரி மாணவிகள் மூலம் பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விழாவில் பயிற்சி ஆட்சியர் மகாலெட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சசி தீபா, மாவட்ட தேசிய தகவல் மைய அலுவலர் ஆறுமுகநயினார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x