Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

சுகாதார தரக்குறியீடுகளின் அடிப்படையில் - வேலூரில் 5 அங்கன்வாடி மையங்களுக்கு தரச்சான்று :

தாராபடவேடு அங்கன்வாடி மற்றும் டார்லிங் நம்ம வீடு உணவகத்துக்கு சுகாதாரத்தில் 5 நட்சத்திர தரச்சான்றை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் டார்லிங் குழும நிர்வாக இயக்குநர் வெங்கடசுப்புவிடம் வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும் போது, ‘‘உணவு வணிகர்கள் அனைவரும் உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். வணிகர்கள் இனிப்பு வகைகளை தயாரிக்கும்போது அது தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண் டும். உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், உணவுப் பொருட்கள் தொடர்பான குறைகளை உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் புகார்களை 94440-42322 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும்’’ என தெரிவித்தார்.

கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தனியார் உணவகங்களில் நடத்தப்பட்ட சுகாதார தர மதிப்பீட்டு ஆய்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

அதில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபடவேடு, டிட்டர் லைன், டிட்டர்லைன் உருது தொடக்க பள்ளி, சத்துவாச்சாரியில் உள்ள 2 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 5 அங்கன்வாடி மையங்கள், டார்லிங் நம்ம வீடு, டார்லிங் பார்பிக், பென்ஸ் பார்க், அலங்கார், சுரபி இன்டர்நேஷனல், ரங்காலயா ராயல் உள்ளிட்ட 6 ஓட்டல் உரிமையாளர்களுக்கு சுகாதார தரச்சான்றிதழ்களை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x