மதுரையைச் சேர்ந்தவர் கொலை வழக்கில் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது :

மதுரையைச் சேர்ந்தவர் கொலை வழக்கில் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது :

Published on

மதுரை, எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அனீஸ் கமால் (48). இவர், மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நிதி மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த 18-ம் தேதி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பிய இவரை, ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று தாக்கியது.

இதில் சுயநினைவிழந்த முகம்மது அனீஸ் கமாலை அந்த கும்பல் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பிச் சென்றது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக உள்ளார். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in