Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை ஒருவரைத் தவிர இளையோர் ஆதிக்கம் : எறையூரில் இளைஞர் காங்கிரஸார் உற்சாகம்

எறையூரில் இளைஞர் காங்கிரஸார் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பேற்கும் அனுசுயா ஆரோக்கியராஜ்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் ஊராட்சியில் தலைவர் முதல் 12 வார்டு உறுப்பினர்களில் ஒருவரை தவிர 11 பேரை இளைஞர்களையே தேர்வு செய்ய வைத்துள்ளனர் இளைஞர் காங்கிரஸார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட் சிகளில் தேர்வு செய்யப்பட்ட உள் ளாட்சிப் பிரதிநிதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அதன்படிஉளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக் குட்பட்ட எறையூர் கிராமம் முழு வதும் காங்கிரஸ் கொடி, தோரணம், ப்ளக்ஸ் பேனர், தப்பாட்டம் என ஒரே கோலாகலமாக காணப் பட்டது. ஊராட்சி மன்றத் தலை வர் பதவியேற்பு விழாவுக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.எம்.ஹெச்.அசன் மவுலானாவை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் காங்கி ரஸார்.

இதையடுத்து மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.எம்.ஹெச்.அசன் மவுலானா முன்னிலையில் ஊராட்சித் தலைவர் அனுசுயா ஆரோக்கியராஜ் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 12 வார்டு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்க ளுக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த அசன் மவுலானா, "இந்த வெற்றியின் மூலம் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயா ஆரோக்கியராஜ், ஒன்றிய கவுன்சி லரான ஆரோக்கிய ஜெனிபர் ரிக்ஸ் மற்றும் ஆரோக்கிய சிநேகா டேவிட் ஆகிய 3 பெண்களுக்கு மாநில இளைஞர் காங்கிரஸில் செயலாளர் பொறுப்பு வழங்க அகில இந்திய இளைஞர் காங் கிரஸ் கமிட்டி முடிவெடுத்து அறி வித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு ஊராட்சியில் இளைஞர்களையே களமிறக்கிய இளைஞர் காங்கிர ஸாரின் இந்த முயற்சி அடுத்தடுத்து தொடரும்" என்றார். இதையடுத்து அனுசுயா ஆரோக்கிராஜ் கூறுகையில், "1-வது வார்டு உறுப்பினர் பச்சையம்மாள் தவிர மற்ற அனைவரும் இளைஞர்கள். ஊராட்சியில் பல் வேறு நலத்திட்ட உதவிகளை இணைந்து செயல்படுத்துவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x