Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM

தீப்பெட்டி ஆலை உரிமம் புதுப்பிக்க அறிவுறுத்தல் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர்கண்ணபிரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு 31.12.2021-ம் தேதியுடன் முடிவடையும் தீப்பெட்டி தொழிற்சாலை தொடர்புடையஉரிமங்களை 5 ஆண்டுகளுக்குபுதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். உரிமதாரர்கள் உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் கடந்த ஓராண்டுக்கான தீப்பெட்டி உற்பத்தி, கந்தகம்மற்றும் குளோரேட் வரவு, செலவுவிவரப்பட்டியல் ஆகியவற்றை மாதவாரியாக அனுப்ப வேண்டும்.

2021-ம் ஆண்டுக்கான உரிமம்புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அதற்கான உரிம கட்டணத்தை 31-12-2021-ம் தேதிக்குள் செலுத்தி செலுத்து சீட்டின் அசலை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து 31.12.2021-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.1.1.2022-ம் தேதி முதல் காலதாமதமாக விண்ணப்பிக்கும் உரிமதாரர்கள் உரிம கட்டணத்துடன் தாமத கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். காலதாமத கட்டணத்துடன் மனு செய்து கொள்ள வேண்டிய கடைசிநாள் 31.1.2022 ஆகும். அதன்பிறகு வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தில் ரூ.2-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். மேலும் உரிமம் 1.1.2022 முதல் 31.12.2026 வரைபுதுப்பித்தலுக்கான கட்டணம் படிவம்2-க்கு புதுப்பித்தல் கட்டணம்ரூ.5 ஆயிரம், படிவம் 9-க்கு புதுப்பித்தல்கட்டணம் ரூ.10 ஆயிரம், படிவம் 8-க்குபுதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கிகிளையில் செலுத்த வேண்டும். மனுமற்றும் அனைத்து ஆவணங்களிலும்உரிமதாரரே கையொப்பமிட்டு இருக்கவேண்டும். பவர் ஏஜென்ட் கையொப்பமிட்டு இருந்தால், பதிவு செய்யப்பட்ட அசல்பவர் பத்திரம் மற்றும் அதற்கான நகல் தாக்கல் செய்ய வேண்டும். உரிம புத்தகத்துடன் உரிமதாரரின் 2 கலர் புகைப்படங்கள் தாக்கல் செய்ய வேண்டும். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் அனைத்தும் முழுவதும் கையால் செய்யப்படுபவை, பகுதி எந்திரம், முழுவதும் எந்திரம் மூலம் செய்யப்படுபவை என்பதை குறிப்பிட்டு உரிமதாரர் கையொப்பமிட வேண்டும்.

தொழிற்சாலை உரிமம் 31.12.2021 வரை செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்கள், தீயணைப்பு உபகரணங்கள் செயல்திறனில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x