Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்க கூடாது : சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கட்சி மீனாம்பாள்புரம் பகுதிக்குழு மாநாட்டில் பேசினார் சு.வெங்கடேசன் எம்பி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கட்சியின் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு 23-வது மாநாடு செல்லூரில் தலைமைக்குழு சந் திரா, மீனாட்சிசுந்தரம், குமார், சரண் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது:பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிவருகிறேன். நாட்டின் ஆவணங்களை விற்பதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாற்றை மாற்றும் வல்ல மையைப் பெற்று விடுவர் என்றார். செயற்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், ம. பாலசுப்பிரமணி யன் கலந்துகொண்டனர்.

செல்லூர் கண்மாயைத் தூர்வாரி மழைநீரைத் தேக்க கோருவது மீனாட்சிபுரத்தில் இருந்து அனுப்பானடிக்கும், மாட்டுத்தாவணி ஆரப்பாளை யத்துக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x