Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூரில் புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உட்பட 16 முக்கிய இடங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள்அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களில் போலீஸார் சுழற்சி முறையில்பணியமர்த்தப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் குமார் நகர், பழைய வடக்கு வட்டார அலுவலக காலியிடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஊத்துக்குளி சாலை வழியாக வரும் பேருந்துகள், கூலிப்பாளையம் நால்ரோட்டை அடைந்துவாவிபாளையம், நெருப்பெரிச்சல் ஆகிய ரிங் ரோடு வழியாக பூலுவபட்டியை சென்றடைந்து, பெருமாநல்லூர் சாலையில் இருந்து, புதிய பேருந்து நிலையத்தை சென்றடைய வேண்டும்.
அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், குமார் நகரில் உள்ள திருப்பூர் பழைய வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்துக்கு வந்தடைந்து பயணிகளை இறக்கி,ஏற்றி அதே வழியில் திரும்பிச்செல்ல வேண்டும். ஊத்துக்குளி சாலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், நீதிமன்ற சாலை வழியாக, குமரன் சாலைக்கு செல்லக்கூடாது. குமரன் சாலையில் இருந்து ஊத்துக்குளி சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லலாம். நீதிமன்ற சாலை ஒருவழிப்பாதையாக செயல்படும்.
பல்லடம் சாலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிஇறக்கி செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT