Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM
திருச்சி காவேரி மருத்துவமனையின் ஹார்ட் சிட்டியில் கதிரியக்க அதிர்வெண் நீக்க (Radio Frequency Ablation) முறையில் இருதய அறுவை சிகிச்சை அளித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் ஹார்ட் சிட்டியின் இருதய நோய்க்கான மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோசப் தனது சக மருத்துவக் குழுவினருடன் இணைந்து இடையீட்டு செயல்முறையை (Interventional Procedure) பின்பற்றி இருதய நோய்க்கான சிகிச்சை அளித்தார். இந்தவகை செயல்முறை உலக அளவில் நவீன முறையில் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிகிச்சை முறை திருச்சியின் காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டியில் முதல் முறையாக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. பொதுவாக நுரையீரலில் இருந்து வரும் அனைத்து ரத்தமும் இருதயத்தின் இடது பக்கம் வந்து சேரும். ஆனால் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நோயாளிக்கு இருதயத்தின் வலது பக்கத்தில் வந்து சேர்ந்தது. இந்த வகையான இருதய நோய்க்கு பொதுவாக திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதில் இருதயத்தின் அசாதாரண இணைப்பு அதன் இயல்பான இடத்துக்கு மாற்றப்படுகிறது.
காவேரி மருத்துவமனையின் மருத்துவர் குழு இன்டெர்வென்ஷனல் செயல்முறையை பின்பற்றி இருதயத்தின் வலது பக்கத்தில் இயல்புக்கு மீறிய ரத்தக் குழாய்க்கு கதிரியக்க அதிர்வெண் நீக்க முறையில் சிகிச்சை அளித்்தது.
இத்தகைய சிகிச்சை முறையை பின்பற்றினால் திறந்த இருதய அறுவை (Open Heart Surgery) சிகிச்சையை தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்த வகையான புதிய நவீன சிகிச்சை முறை உலக அளவில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று டாக்டர் ஜோசப் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT