Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM
மதுரை மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் டி.குண்ணத்தூரில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, மாவட்டப் பொருளாளர் திருப்பதி, ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், ராஜா, கே.முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்தும், அதிமுக பொன்விழா ஆண்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்பி.உதய குமார் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் தோல்வியை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்தி ஆளும் கட்சியினர் சூழ்ச்சி செய்துள்ளனர். திருமங்கலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இறந்தவர்கள், ராணுவத்தில் பணிபுரிவோரின் வாக்குகளைப் பதிவு செய்து முறைகேடு செய் துள்ளனர். இது குறித்து புகார் செய்தும் எந்தப் பலனும் இல்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT