Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் உள்ள 27மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் 25 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஓர் இடத்தை மட்டுமே அதிமுக வென்றுள்ளது. இதனால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது. அதேபோல் 13 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட ஊராட்சிக் குழுஉறுப்பினர்களில் 11 இடங்களையும் 98 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 78-ஐயும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் ஓர் இடத்தில் திமுகவும், ஓர் இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 18 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-14, அதிமுக-2, பாமக-1,பாஜக-1 இடங்களை கைப்பற்றியுள்ளன.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள21 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் திமுக-15, காங்கிரஸ்-1, சுயேச்சைகள்-2, அதிமுக-2, பாமக-1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 22 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-18, சிபிஎம்-1, அதிமுக-3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. 16 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-8,அதிமுக-5, காங்கிரஸ்-1, சுயேச்சைகள்-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
குன்றத்தூர் ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளில் திமுக-2, மதிமுக-1 இடங்களை கைப்பற்றியுள்ளன. மொத்தம் உள்ள 21 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-18, காங்கிரஸ்-1, அதிமுக-2இடங்களை கைப்பற்றியுள்ளன
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி குழுஉறுப்பினர் பதவிகளில் 15 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஓர் இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளில் ஓர் இடத்தில் திமுகவும், ஓர் இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் 24 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-18, மதிமுக-1, அதிமுக-4, பாமக-1 இடங்களை கைப்பற்றியுள்ளன.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளையும் திமுககைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 18 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-12, அதிமுக-4,பாஜக-1, சுயேச்சை-1 இடங்களை கைப்பற்றியுள்ளன.
லத்தூர் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-10, அதிமுக-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சித்தாமூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 2 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 16 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-10, அதிமுக-3, விடுதலை சிறுத்தைகள்-2, காங்கிரஸ்-1 இடங்களில் வென்றுள்ளன.
மதுராந்தகம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளில் 2 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.மொத்தம் உள்ள 22 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் திமுக-10, அதிமுக-7, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேச்சை-3 இடங்களில் வென்றுள்ளன.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 26 ஒன்றியக் குழுஉறுப்பினர்களில் திமுக-16,அதிமுக-7, விடுதலை சிறுத்தைகள் கட்சி-1, சுயேச்சைகள்-2 வெற்றி பெற்றுள்ளனர்.
புனித தோமையர் மலை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 3 இடங்களில் 2 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. மற்றொரு இடத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது. 11 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக-9 இடங்களிலும், சுயேச்சை ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
திருப்போரூர் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இடங்களில் ஓர் இடத்தில் திமுக வெற்றி பெற்றது. மற்றொரு இடத்தில் திமுக முன்னணியில் உள்ளது. மொத்தம் உள்ள 22 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 8 இடங்களில் திமுகவும், 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், 2 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். நேற்று மாலை 8 மணி வரை 3 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT