Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

காமராசர் பல்கலை.யில் போராட்டம் நடத்தும் தொகுப்பூதிய பணியாளர்கள் எம்.பி.யிடம் மனு :

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை

மதுரை காமராசர் பல்கலைக் கழக வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் தொகுப்பூதியப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் களை சு.வெங்கடேசன் எம்.பி. நேற்று சந்தித்துப் பேசினார். அவ ரிடம் கோரிக்கை மனுவை பணி யாளர்கள் அளித்தனர்.

செய்தியாளர்களிடம் சு.வெங் கடேசன் எம்.பி. கூறிய தாவது:

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியம் பெறும் 350 ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்புப் போரா ட்டம் நடத்தி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல் வேன் என்று கூறினார்.

ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x