Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

திருப்பூர் மாவட்டம் முழுவதும் - காலியாக உள்ள 19 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல்140 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு :

திருப்பூர்/காங்கயம்

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இன்று (அக்.9) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

காங்கயம் வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு 10-க்கான உறுப்பினர் தேர்தல் மற்றும் தாராபுரம் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றியவார்டு எண் 12-க்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற உள்ளஅவிநாசி வட்டாரம் கருவலூர் ஊராட்சி, மூலனூர் வட்டாரம் எரிசனம் பாளையம் ஊராட்சி மற்றும் உடுமலை வட்டாரம் ஆர்.வேலூர் ஊராட்சி. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள அவிநாசி வட்டாரம் ராமநாதபுரம், பழங்கரை, தாராபுரம் வட்டாரம் பொன்னாபுரம், குடிமங்கலம் வட்டாரம் ஆமந்தகடவு, காங்கயம் வட்டாரம், கணபதிபாளையம், குண்டடம் வட்டாரம் எல்லப்பாளையம்புதூர், மூலனூர் வட்டாரம் கருப்பன்வலசு, பல்லடம் வட்டாரம் மாணிக்காபுரம் மற்றும்பணிக்கம்பட்டி, பொங்கலூர் வட்டாரம் வடக்கு அவிநாசிபாளையம் மற்றும் உகாயனூர், ஊத்துக்குளி வட்டாரம் கணபதிபாளையம் மற்றும் வடுகபாளையம், வெள்ளகோவில் வட்டாரம் மேட்டுப்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

காங்கயம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு, தாராபுரம் ஒன்றியத்தின் 12- வது வார்டு என கட்சி சின்னத்தில் போட்டியிடும் 2 பதவிகள் மட்டுமே வருகிறது. 3 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 14 வார்டு உறுப்பினர் அனைவருமே சுயேச்சை சின்னம் பெற்று, தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 140 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு

காங்கயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10-வது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 7 பேர்போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்குப்பதிவுக்கானவாக்குப்பெட்டிகள் அனைத்தும்மண்டலம் வாரியாக பிரித்து நேற்றுவாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட நத்தக்காடையூர்- 4, பரஞ்சேர்வழி - 1, மருதுறை- 2, பழையகோட்டை- 1, தொட்டியபாளையம் - 1 ஆகிய 9 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x