Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.26,300 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட 6.750 கிலோ கிராம்எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்தவர்களிடம் இருந்து அபராதத் தொகையாக மொத்தம் ரூ. 16,800 என மொத்தம் ரூ.43,100 வசூல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT