Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM
மதுரை நகர் ஆயுதப்படை துணை ஆணையராக இருந்தவர் சோமசுந்தரம். ஏற்கெனவே இவர் டிக்-டாக் சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அவரது வீட்டில் எண்ணெய் குளியல் எடுக்கத் தயாரான நிலையில், அவருக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை புல்லாங்குழல் வாசிக்கக் கேட்டு ரசித்துள்ளார்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, துணை ஆணையர் சோமசுந் தரத்திடம் விளக்கம் கேட்டிருந் தார். பின்னர் மாநகர காவல் துறை சார்பில், தமிழக டிஜிபிக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், துணை ஆணையர் சோமசுந்தரம் சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைத்து டிஜிபி சைலேந்தி ரபாபு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT