Published : 06 Oct 2021 03:12 AM
Last Updated : 06 Oct 2021 03:12 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை நேற்று திறக்கப்பட்டது. இந்த அறையில் தேவராஜ சுவாமி தேவி, பூதேவி சமதேராய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 1961-ம் ஆண்டு கண்ணாடி அறை அமைக்கப்பட்டது. அந்த கண்ணாடி அறை பழுதான நிலையில் இருந்தது. பெருமாள் பக்தரான தாமல் எஸ்.நாராயணன் இந்த கண்ணாடி அறையை ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்க முன்வந்தார். புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை நேற்று திறக்கப்பட்டது.
இந்த கண்ணாடி அறை திறப்பு விழாவில் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் தேவராஜ சுவாமி தேவி, பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாரனைகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT