Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

மதுரை நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு :

மதுரை நகரில் சாலைகளை சீரமைக்க ஊரக மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.19.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் 39,172 கி.மீ. நீளம் கொண்ட சாலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்க ஜன.30-ல் டெண்டர் விடப்பட்டது. இதுவரை சாலை சீரமைப்புப் பணி தொடங்கவில்லை. சாலைகளை உடனே சீரமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் விசாரித்து, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகி யோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.22-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x