Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

125 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்க உத்தரவு :

மதுரை

தமிழக சிறைகளில் 10 முதல் 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 125 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் 125 கைதிகள் 10 முதல் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை தமிழக அரசின் 2018-ம் ஆண்டின் அரசாணை அடிப்படையில் முன்விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக சிறைத்துறை கூடுதல் முதன்மை செயலர் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x