Published : 05 Oct 2021 03:12 AM
Last Updated : 05 Oct 2021 03:12 AM

மகாளய அமாவாசையான நாளை - வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து :

திருவள்ளூர்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாளய அமாவாசையான நாளை(அக்.6) திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயில், அஹோபில மடத்தின்பராமரிப்பில் இருந்து வருகிறது. நாளை (அக்.6-ம் தேதி) மகாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள்திருவள்ளூருக்கு வருகை தந்தால், கரோனா பரவ வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்கும் விதமாக மகாளய அமாவாசைக்கு முதல் நாளான இன்று (5-ம் தேதி) மதியம்12 மணி முதல், மகாளய அமாவாசை நாளான நாளை இரவுவரைபக்தர்கள் தரிசனத்தை, கோயில்நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மேலும், கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்தஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல்தெப்பக்குள வாயில் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x