Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

டாஸ்மாக் கடைகளில் ரூ.19.70 கோடிக்கு மது விற்பனை :

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 6 நாட்கள் டாஸ்மாக்மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ரூ.19.70 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகி யுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நாளை (6-ம் தேதி) மற்றும் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் விதமாக மொத்தம் 7 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள், அதையொட்டிய பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று (4-ம் தேதி) தொடங்கி வரும் 9-ம் தேதி வரை என 6 நாட்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்பட உள்ள வரும் 12-ம் தேதி என மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ந்து 6 நாட்களுக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் மதுபான பிரியர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை நேற்று முன்தினம் வாங்கி குவித்தனர்.

இதன் காரணமாக வழக்கத்தைவிட இரண்டு மடங்கு மதுபாட்டில் கள் விற்பனையாகியுள்ளன. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் நிர்வாக கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 115 கடைகளில் நேற்று முன்தினம் (3-ம் தேதி) ஒரே நாளில் மட்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்றுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக்கோணம் டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள 81 கடைகளில் ரூ.7 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்றுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.19 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x