Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்தி லியில் உள்ள டாக்டர் ஆர்கேஎஸ்.கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கமும் ஆசிரியருக்கான புத்தாக்கக் கருத் தரங்கமும் நடைபெற்றது.
கருத்தரங்கில் கணினி பயன் பாட்டியல் துறைத் தலைவர் அசோக் வரவேற்றார். நிகழ்வுக்கு டாக்டர் ஆர்கேஎஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் மருத்துவர். ஆ.மனோபாலா தலைமை வகித்தார். இயக்குநர் மருத்துவர் ஆ.சிஞ்சு முன்னிலை வகித்தார்.
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர், செனட் உறுப்பினர் முனைவர் சு.சத்யா சிறப்புரையாற்றுகையில், “மாணவர்கள் நேர்மறையான சிந்தனையோடு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பெற்று, தன் னம்பிக்கையுடையவர் களாகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் திகழ வேண்டும்” என்று ஊக்குவித்தார்.
பேராசிரியர்களுக்கான புத் தாக்க கருத்தரங்கில் உரையாற்றும் போது, “ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் சார்ந்து பணியாற்ற வேண்டும். மாணவர்களை கையாளும் விதத்தில் தேர்ந்தவர்களாகவும், மென்மையாகக் கையாளும் திறன்பெற்றவர்களாகவும் திகழ வேண் டும்” என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கு.மோகனசுந்தர், துணை முதல்வர் முனைவர்.பெ.ஜான்விக்டர் மகிழ்வுரை வழங்கினர். சிறப்பு விருந்தினரை கணிதத்தறைத் தலைவர் நு.நர்கீஸ்பேகம் அறிமுகம் செய்து வைத்தார். கணினித் துறைத் தலைவி சு.மகாலட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்வில் ஆர்கேஎஸ் நிறுவனங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் செய்திருந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT